தலைமுடி ஆரோக்கியம்
தலைமுடி உதிர்தல் மற்றும் வழுக்கைத் தலைக்கு உண்மையான காரணம் என்ன?
தலைமுடி உதிர்வதற்கு உண்மையான காரணமானது நீங்கள் அதிகமாக மூளையை பயன்படுத்திக் குழப்பிக் கொள்வதே தலைமுடி உதிர்வதற்கு காரணம். அதிகமாக மூளையை பயன்படுத்தும் போது மூளைக்கு அதிக இரத்தம் தேவைப்படுவதால் மூளைக்கே அதிக இரத்தம் செல்கிறது. இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போகாததால் தலைமுடி உதிர்கிறது. இதை சற்று விரிவாக பார்த்தால் உங்களுக்கு எளிமையாக புரியும்.
நமது உடல் முழுவதும் தேவையான இரத்த ஓட்டம் அனைத்து உடல் உறுப்புகள் மற்றும் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீராக போகும். அதில் ஒரு பகுதிதான் உங்கள் தலைப்பகுதி மற்றும் அங்கு உள்ள மூளை மற்றும் தலைமுடி. மூளைக்கும் தலைமுடிக்கும் தேவையான அளவு இரத்தம் எப்பொழுதும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் நீங்கள் அதிகமாக மூளையை பயன்படுத்தும் போது இந்த இரத்த ஓட்டம் மூளைக்கே அதிக அளவு செல்கிறது. இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போகாததால் தலைமுடி உதிர்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டாலும் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போனால் தான் தலைமுடி நன்றாக இருக்கும்.
நீங்கள் சற்று யோசித்து பாருங்கள். உடலுக்கு எந்தவித ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளாமல் தலைமுடிக்கு எந்தவித அக்கறையும் காட்டாமல் வாழ்பவர்களுக்கு தலைமுடி சம்மந்தப்பட்ட எந்தவித பிரச்சினையும் இருக்காது. ஆனால் நீங்கள் ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டும் மற்றும் தினமும் தலைமுடிக்கு அக்கறை செலுத்தியும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஆகிறது. இதற்கு காரணம் அவர்கள் மூளையை அதிகம் பயன்படுத்திக் குழப்பிக் கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு தேவையான அளவு இரத்த ஓட்டம் தலைமுடிக்கு செல்வதால் தலைமுடி ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் நீங்கள் அதிகமாக மூளையை பயன்படுத்தி குழப்பிக் கொள்வதால் இரத்த ஓட்டம் மூளைக்கே அதிகமாக செல்கிறது. இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போகாததால் தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஆகிறது.
பரம்பரை வழுக்கையை தடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். பெற்றோர்களுக்கு மற்றும் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வழுக்கைத் தலை இருந்தால் குழந்தைகளுக்கும் வழுக்கை விழும் என்ற அவசியம் இல்லை. தலைமுடிக்கு இரத்த ஓட்டம் தேவையான அளவு போகாமல் இருந்தால் தான் தலைமுடி உதிரும். இப்படி தலைமுடி ஒவ்வொரு நாளும் உதிர்ந்து வழுக்கை ஆகிறது. தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போனால் தலைமுடி உதிராது. பரம்பரை வழுக்கையும் வராது.
ஏன் பெண்கள் மற்றும் சில ஆண்களுக்கு வழுக்கை வருவதில்லை?
அவர்களும் மூளையைப் பயன்படுத்தி யோசித்து மற்றும் மூளையைக் குழப்பிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் சிறிய நேரம் மட்டுமே மூளையைப் பயன்படுத்தி குழப்பிக் கொள்வார்கள். பிறகு மூளையைப் பயன்படுத்த மாட்டார்கள். எனவே அவர்களுக்கு இரத்த ஓட்டம் தலைமுடிக்கு சீராக போவதால் தலைமுடி நன்றாக உள்ளது.
ஏன் தலையின் மேல் பகுதியில் மட்டும் வழுக்கை ஆகிறது. தலையின் பின்புறம் மற்றும் ஓரங்களில் வழுக்கை விழுவதில்லை?
இதற்கு காரணம் மூளையானது தலையின் மேற்புறம் அருகில் தான் அமைந்துள்ளது. நாம் மூளையை அதிகமாக பயன்படுத்தும் போது இரத்த ஓட்டம் அதிகமாக மூளைக்கு செல்கிறது. அதனால் மேற்புறம் உள்ள தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போகாததால் அங்குள்ள தலைமுடி உதிர்கிறது. ஆனால் தலையின் பின்புறம் மற்றும் ஓரங்களில் உள்ள தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் செல்கிறது. அதனால் அங்குள்ள தலைமுடி உதிர்வதில்லை.
தலைமுடி உதிர்வதை எப்படி சரிசெய்வது?
அதிகமாக மூளையை பயன்படுத்திக் குழப்பிக் கொள்ளாதீர். எதற்கு எடுத்தாலும் மூளையை பயன்படுத்தி யோசித்து யோசித்து ஒரு செயலை செய்வதால் மூளைக்கு அதிக இரத்தம் செல்கிறது. இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் செல்வதில்லை. யோசிப்பது தவறில்லை எதற்கு எடுத்தாலும் யோசிப்பதுதான் தவறு. உங்களுக்கு அதிகமாக மூளையை பயன்படுத்தி யோசிக்கும் பழக்கம் இருந்தாலும் தினமும் காலையில் எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பும் கண்டிப்பாக பத்து நிமிடம் தலைக்கு மசாஜ் செய்யுங்கள். மேலும் சில மணி நேரத்துக்கு ஒரு முறை தலைக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்த ஓட்டம் கிடைக்கும். உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருக்காது.
வழுக்கைத் தலையில் முடியை வளர வைக்க முடியுமா?
நிச்சயம் முடியும். ஆனால் இதற்கு நீங்கள் பொறுமையாக விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குவதற்கு முன் வரை உங்களால் முடிந்த அளவு தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். உதாரணமாக பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் எதுவும் செய்ய கூடாது. பிறகு மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சற்று நேரத்திற்கு எதுவும் செய்ய கூடாது. பிறகு மீண்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நாள் முழுவதும் நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலைக்கு அதிகப்படியான இரத்தம் போவதால் தலைமுடி வளர ஆரம்பிக்கும். இந்த முறையில் ஒரே வாரத்தில் உங்களுக்கு வழுக்கை தலையில் முடி வளராது. குறைந்தது ஆறு மாதம் ஆகும். வழுக்கை உள்ள இடத்தில் மட்டுமல்லாமல் தலையின் அனைத்து பகுதிகளிலும் மசாஜ் செய்யுங்கள். உங்கள விரல்களை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம் அல்லது தலைக்கு மசாஜ் செய்யும் இயந்திரங்கள் உள்ளது அதை பயன்படுத்தலாம்.
இந்த மசாஜ் முறையை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எந்தவித செலவும் இல்லாமல் வழுக்கைத் தலையில் முடியை வளர வைக்க முடியும்.
நரை முடி
தலைக்கு மசாஜ் முறையை பின்பற்றினால் இரத்த ஓட்டம் தலை முடிக்கு அதிகமாக கிடைக்கும். நரை முடி பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் நீண்ட காலம் வரை நரைமுடி வராது. தலைமுடி நன்கு கருப்பாக இருக்கும்.
தலைமுடி அடர்த்தி
தலைமுடி அடர்த்தியாக இருக்க இந்த மசாஜ் முறையை பின்பற்றினால் தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருக்கும்.
*விரைவில் பலனை எதிர்பார்க்க வேண்டாம். ஆறு மாதங்கள் நல்ல முயற்சியில் இருங்கள், பலன் கிடைக்கும்.